என்ன சொல்லி பாட்டெழுத என்று
நானும் தேடிப் போறேன்!
எதிரில் வரும் சிலபேரைக் கேட்டு
ஒரு முடிவைத் தாரேன்!
கொஞ்சம் என்கூட வாங்க
நான் பாடும் பாட்டைக் கேட்டுப் போங்க!
கன்னம் தொட்டு மெல்ல சென்ற
காற்றினையே கேட்டுப் பார்த்தேன்!
கடுஞ் சினத்தில் அதுவும் சொன்ன
பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன்!
என்னடா பூமியில, என்னதான் செய்யுறீங்க?
என் முகத்தில் கரியைப்பூசி
உங்க வர்க்கத்தையே அழிக்கிறீங்க
என்று சொன்ன காற்றைவிட்டு
அடுத்திருந்த மலையைக் கேட்டேன்
எங்கடா நீயும் வந்த?
எனக்கு எப்ப வெடியும் வைப்ப?
தென்பொதிகை மலை தமிழைப்
போற்றும் மூடர் கூட்டம் தானே நீயும்
தேவையின்றி என்னை
அறுத்துக் கூறு போட்டு விக்கிறயே
துண்டாகிக் கிடந்த மலை கொதித்து
சொல்ல விலகி சென்று
தூரத்தில் இருக்கும்
ஏரிக்கரை நோக்கி நடக்கலானேன்
வெண்நுரையால் அழகாக
இருந்த ஏரி நீரைக் கேட்டேன்
விஷம் கொடுத்து என்னைக்
கெடுத்த போக்கிறியே நீபோ
என விரட்டிடவே வேறு வழி
தெரியாமல் நானும் நின்றேன்!
என்ன சொல்லி பாட்டெழுத
என்பது தான் புரியாது!
எதிரில் கண்ட சில பேரும் திட்ட
நானும் திகைத்து நிற்க
வேறு வழி இருக்குதான்னு
சொல்லிடத்தான் நீங்க வாங்க!
இனி வருங்காலம் என்ன ஆகும்
என்று சொல்லிப் போங்க!
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!