என்ன வேணும்னாலும் சென்னை நமக்கு கொடுக்கும்
உண்ண உணவு உறங்க இடம் கொடுத்து வளர வைக்கும்
புண்ணியத்தை அள்ளி தர கோயில்களும் இருக்கும்
பொழுது போக்கி ரசிப்பதற்கு பீச் இடம் கொடுக்கும்
பெண்ணும் ஆணும் வேகமாக ரெக்கை கட்டி பறக்கும்
புதுசு புதுசா நமக்காக திரைப்படங்களுமே கிடைக்கும்..
சின்ன வயசு பெரிய வயசு பேதங்களை மறைக்கும்
சிக்கிகிட்டா நம்ம வாழ்வை சிதைச்சு போட்டு சிரிக்கும்
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942