என் ஆசை

உச்சிமலை பூவெடுத்து

உன்தலையில் வச்சிடத்தான் ஆசை

பச்சமலை பாயெடுத்து – பைங்கிளியே உன்னோட

பாதம் படும் பாதையெல்லாம்

மெத்தையாக்கி வச்சிடத்தான் ஆசை

 

பிச்சிப்பூ கோர்த்தெடுத்து

பின்னலிலே மின்னச்செய்ய ஆசை

அச்சு வெல்லச் சாறெடுத்து – அய்யனாரு கோவிலுக்கு

அஞ்சுபடி பொங்கலிட்டு உன்

கையால தின்னிடத்தான் ஆசை

 

வீச்சருவா உன் மூக்கில்

விடிவெள்ளி கொண்டு வந்து வச்சிடத்தான் ஆசை

பேச்செல்லாம் தேன்போல – நீ பேசும் போது

மெய் மறந்து சிலை போல

பேசாம பார்த்திருக்க ஆசை

 

சீச்சீன்னு வெட்கப்பட்டு

சிவந்த உன் கன்னத்தில முத்தமிட ஆசை

ஏச்சிடத்தான் செய்திடுவா

எங்க அத்தை உங்க அம்மா

கோச்சுக்காத செல்லமே நீயும் – மீறிகோபம் கொண்டால்

கொந்தளிச்சுப் போகுமே ஆறும்

இராசபாளையம் முருகேசன்    கைபேசி: 9865802942

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.