என் கனவில் வந்தவளும் நீதானே – உன்
எண்ணத்திலே நானும் சிக்கிக் கொண்டேனே
கண்ணாலே என்னைக் கொத்தி சென்றாயே – உன்
கண்ணின் மையம்போல இங்கு நானானேன்
பின்னலிலே என்னைக் கட்டிச் சென்றாயே – உன்
பேச்சினிலே கொஞ்சும் தமிழ் நானானேன்
சின்னக்காயின் கொலுசொலி கேட்டேனே – உன்
சிற்றடியை தாங்கும் பூமி நானாவேன்
முந்தானை காற்றிலாடக் கண்டேனே – அதில்
முன்கொசுவம் நானாகிப் போவேனே
விந்தையிலும் விந்தையிது என்பேனே – உன்
விற்புருவம் நானாகிப் போவேனே
செந்தாழம் பூவின் வாசம் உன்மேனி – அதில்
சின்ன நாகமென இனி நானாவேன்
நந்தவன பூந்தோட்டம் உன்போல – இதழ்
நறுமலர் பூத்ததில்லை என்பேனே
அந்தியிலே வந்த நிலா உன்போல – நல்ல
அழகில்லை என்றே நானும் சொல்வேனே
சந்தனத்தின் நிறம் உன்மேனி தானே – அதில்
செந்தூரம் போல ஒட்டிக் கொள்வேனே
வெண்சங்கு கழுத்திலே பூமாலை – நான்
வேகமாக சூட்டிடத்தான் வந்தேனே
அன்போடு குலவையும் மேலோங்க – என்
ஆரணங்கே உன்னை மணம் செய்வேனே
கைபேசி: 9865802942