என் மகனா இப்படி?

சிவகாமிக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. அந்த ஸ்டோரில் இருந்த பதினைந்து வீட்டுக்காரர்களும் மொத்தமாக அவளைச் சூழ்ந்து கை கொட்டிச் சிரிக்கிறாற் போல் ஓர் பிரமை.