இன்பங்களைப் பெருக்கிடவே
எங்கள் வீட்டில் வந்துதித்தாய்!
இன்னும் வரும் பிறவியிலும்
என் மகளாய் நீ பிறப்பாய்!
சின்ன வயதில் மழழையினால்
என் மனதை மகிழ்வித்தாய்!
பின்னல் ஜடை தோளில் சுமக்க
என்தாய் போல் நீ தோன்றுகின்றாய்!
அன்று என் கரம் பிடித்து
அழகு நடை நீ நடந்தாய்!
இன்று என்னை இரு கரத்தால்
நீதானே தாங்குகிறாய்!
முன்னனொரு பிறவியிலே
நான் செய்த புண்ணியம்தான்!
என்மகளாய் நீ கிடைத்த வரம்
எந்தன் பாக்கியம் தான்!
மண்ணில் பல வெற்றிகளை
மாலையென பெற்றிடுவாய்!
வண்ண மலர் தோட்டம் போல
மனதாலே மகிழ்ந்திருப்பாய்!
கண்ணின் கருவிழி யெனவே
என்னை நீயும் காத்திடுவாய்!
வண்ணம் கொண்ட வெண்ணிலவின்
வடிவம் போல நிலைத்திருப்பாய்!
கைபேசி: 9865802942
Superb