என் மனதில் மெல்ல மெல்ல
சிந்தனையும் வந்து செல்ல
உன் முகமே வெள்ளமென
வந்து வந்து போவதென்ன?
சின்னஞ்சிறு குருவி போல
சிறகடிக்க நினைக்கும் போது
வண்ண வண்ண கனவுகளை
விதைத்துச் செல்லும் மாயமென்ன?
கன்னங்கரு மேகமென
காற்றினிலே திரியும் போது
தென்பொதிகை தென்றலென
தாவி என்னை அணைப்பதென்ன?
விண்ணும் மண்ணும் தாவித்தாவி
விரி கடலின் மேலேறி
வெண்ணிலவின் மேனிதனை
விரைந்து நானும் தழுவும் வேளை
அன்னவளின் தங்கையென
அடுத்து நீயும் நிற்பதென்ன?
என்மனதை கொள்ளையிட்டு
ஏமாற்றிச் செல்வதென்ன?
என் மனதில் மெல்ல மெல்ல
சிந்தனையும் வந்து செல்ல
உன் முகமே வெள்ளமென
வந்து வந்து போவதென்ன?
கைபேசி: 9865802942