எப்போதும் கனவுதான்…

குடிசை வீடு

வயிறு நிரம்ப கேப்பைக்கூழு

விடிகாலை வெயிலு

தினமும் அமரும் நடுவீட்டில்

கடிகாரம் அதுதானே

காலம் சொல்லத் தயங்காதே…

அடிமலையில் தவழ்ந்து வரும்

காற்று நடனம் கற்றுத்தர…

செடி கொடி மரங்களெல்லாம்

தானாக ஆட்டம் போட …

பாட்டன் பாரதியின்

காணி நிலம் வேண்டும் என்ற

ஆசை வருதல் இயல்புதான்

ஆனால் அது எப்போதும் கனவுதான்…

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942


இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்