வெட்டரி வாள் வேல் கம்பு
பத்திரமா கையில் வச்சு
கட்டி வச்ச கோயிலுல
சாமியைத்தான் வச்சாலும்
நித்தம் வந்து பயமின்றி
ஏமாற்றும் மக்களுண்டு!
பத்து ரூபாய் காணிக்கை
போட்டுப் போனா
பல்லாயிரம் அன்பளிப்பு
தப்பாம கிடைக்கும்
என்று நம்பும்
மனுசன் அதிலுண்டு!
பத்து பைசா சூடத்துக்கு
பாஸ் மார்க் நிச்சயம்
என்று நம்பும்
பையன் கூட அதிலுண்டு
முதல் பூவு சாமிக்கு னா
சீக்கிரமா வித்துடலாம்
என்று நம்பும்
பூக்கார கிழவியுண்டு!
எத்தனை பேர் வந்தாலும்
எப்படித்தான் போனாலும்
இப்ப வரை மாறாம
உட்கார்ந்து இருக்கும் சாமி நீ
எப்ப வந்து சொல்லப் போற
நல்லதையும் கெட்டதையும்?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!