ஒவ்வொன்றும் இருவகையுண்டு
ஒரு முனைதனில் மறுமுனையுண்டு
வீரத்தினில் கோழையுண்டு
கோழையிலும் வீரமுண்டு
நன்மைதனில் தீமையுண்டு
தீமையிலும் நன்மையுண்டு
குழப்பத்தினில் தெளிவுண்டு
தெளிவிலும் குழப்பமுண்டு
உண்மைதனில் பொய்யுண்டு
பொய்யிலும் உண்மையுண்டு
துணிவில் பயமுண்டு
பயத்திலும் துணிவுண்டு
சாதனையில் சோதனையுண்டு
சோதனையிலும் சாதனையுண்டு
வெற்றியில் தோல்வியுண்டு
தோல்வியிலும் வெற்றியுண்டு
இதில் அதுவுண்டு
அதிலும் இதுவுண்டு
எதிலும் எதும் உண்டு
உன் தேவையறிந்து உட்கொள்
உன் வாழ்க்கை உனது…..
அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
8438574188
மறுமொழி இடவும்