எல்லாளன் எலி ஒன்று
துள்ளி துள்ளி வந்தது
எங்கெங்கே என்ன இருக்கு
எட்டி எட்டி பார்த்தது
அள்ளித் தின்னும் பொருளெங்கே
அங்கும் இங்கும் தேடுது
அடுக்களை அலமாரி என
ஆடி ஓடித் தாவுது
வெல்லக்கட்டி போட்டு வச்ச
வெற்றுச் சாடி கண்டது
வேகமாக தின்ன என்ன
என்றே தேடி திரிந்தது
நெல்லரிசி கிடைச்சிட்டா
நல்லா கொறிச்சிடவே
நெத்திலி மீன் வாசனையில்
நெஞ்சம் தடுமாறுது
மெல்ல கருவாடை அங்க
முள்ளின் மேலே கண்டது
மெதுவாக அங்கே சென்று
மோந்து மோந்து பார்த்தது
எல்லாளன் எலி அந்த
முள்ளை மெல்லத் தொட்டது
எங்கிருந்தோ பட்டென்று வந்த
ஒருகதவு மூடிக் கொண்டது
எல்லாளன் எலி இப்போ
நல்லா மாட்டிக் கொண்டது
எல்லாமே ஆசையால
வந்தது வினை என்றது
கைபேசி: 9865802942