எல்லோரும் ஒருவரே – கவிதை

நானும் எனது நினைவுகளும்

மற்றும் எழுதும் காகிதமென

மூன்று அடுக்குகளாய் இருந்தோம்

அங்கே இங்கும் அங்கும்

தாவும் அர்த்தங்கள் மோதிக்கொண்டன‌

கவனிப்பவனின் கண்களிலும்

மற்றவனின் மறதியிலும்

கிட்டாத பொறியில்

பிசுபிசுத்திருந்தது காலம்

முடிந்ததின் முடிவில்

குறை தீர்ந்த பாத்திரங்களை

எழுதியவர்கள் வடித்தார்கள்

மொழி இயந்திரத்தில் 

பழுது பார்க்கப்பட்டு

உணர்ச்சிகள் கேட்டிராத சத்தத்தில்

தேவை தேவையென

விடுபட மறுக்கும் புதிரில்

முடியாத அத்தியாயத்தில்

மூடிய புத்தகத்தின் ஓசையில்

முடிந்தது கதையென

கூடிய கூட்டத்தில்

நாம் ஒன்றுபோல் செல்லும்

எல்லோரும் ஒருவரே

புஷ்பால ஜெயக்குமார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.