எள் மருத்துவ பயன்கள்

எள் மருத்துவ பயன்கள் நிறைய உள்ளன. எள் முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வறட்சி அகற்றும்.

எள்ளில் அதன் விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை, கருமை, சிவப்பு என பல‌ வகைகள் அறியப்படுகின்றன‌.

எள் வெப்பம் உண்டாகும். உடல் உரமாக்கும். சிறு நீர் பெருக்கும். பால் பெருக்கும். மலமிளக்கும். ருது உண்டாகும்.

காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடைய நல்லதாகப் பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது.

கண் தொடர்டபான நோய்களுக்கு மருந்தாகும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்கிற பழமொழி இன்னும் வழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் ஏராளமாக பயிரிடப்படுகின்ற சிறு செடி. திலம் என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. இலை, பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

எள்ளில் இருந்து வடிக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் எனப்படுகின்றது.

உணவிற்கான எண்ணெயாக நல்லெண்ணெய் பலவிதங்களில் பயன்படுகிறது.

நல்லெண்ணெயில் காரமோ, கசப்போ, இனிப்போ, துவர்ப்போ எது கலந்தாலும் இனிய சுவை தரும். எண்ணெய்க் குளியலில் நல்லெண்ணெய் முக்கிய இடம் வகிக்கின்றது.நல்லெண்ணெய் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் சிறப்புக் கொண்டது. 

எள் மருத்துவ பயன்கள்

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த 5கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொள்ளலாம்.

எள் எண்ணெய்யை ( நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும்.

எள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தெளிவடையும்.

எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும்.

மகளிர் தங்களது கர்ப்ப காலத்தில் அதிக அளவு எள் சாப்பிடுவது கருச்சிதைவை தூண்டும். பழங்காலத்தில் இது ஒரு இயற்கையான கருத்தடை முறையாகவும் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments are closed.

%d bloggers like this: