1) பிறருக்கு கொடுப்பதைத் தடுக்காதே
2) உனக்கான இயல்பை உடைக்காதே
3) பொறாமையை உள்ளத்தில் விதைக்காதே
4) பொய்களைக் கூறி அடுக்காதே
5) உண்மையை எப்போதும் மறைக்காதே
6) மனதில் பேராசையை உடுத்தாதே
7) பிறர்பொருளை எது கிடைத்தாலும் எடுக்காதே
8) மறந்தும் தீமை நினைக்காதே
9) வீழ்ந்த நிலையிலும் எழத் தயங்காதே
10 )துன்ப நிலையிலும் நன்மையை மறக்காதே
11) பொன்போன்ற பொறுமையை இழக்காதே
12) கண் போன்ற நேர்மையை விட்டுவிடாதே
13) உயிர் போன்ற மானத்தை விலக்காதே
14) பேச்சில் தீய சொற்களைக் கலக்காதே
15) பணம் என்றால் வாயைப் பிளக்காதே
16) தோல்வி வந்த போதும் முயற்சியைத் தள்ளாதே
17) வலிகள் வந்த போதும் வலிமையை விரட்டாதே
18) பயம் வந்த போதும் பலத்தை அழுத்தாதே
19) பணத்திற்காக நற்பண்புகளை புதைக்காதே
20) உலகையே ஆண்டாலும் ஆணவம் கொள்ளாதே

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்