எழுத்தின் தாய் எழுதுகோல்
எழுதுகோல் இல்லை எனில்
எழுதுபவரும் இல்லை உலகில்
எம்தேசியகவி பாரதியும் இல்லை
எம்தேசத்தின் கவிஞர்களும் இல்லை
எழுதுகோலே உலகை மாற்றியது
எழுத்தாளர்களை உயர்த்தி போற்றியது
எறும்பின் வாழ்வையும் எழுதும்
எமனின் வாழ்வையும் எழுதும்
எதுவும் எழுதுகோலுக்கு ஒன்றே
எல்லாம் எழுதுகோலால் சாத்தியம்
எழுச்சியைக் கொடுக்கும் நிச்சயம்
எழுதுகோலிற்கு மொழிபேதம் கிடையாது
எனவே சண்டையிட்டு உடையாது
எத்தனை வகை எழுதுகோலில்
எழுத்தாணி தொடங்கி தோன்றின
எங்கள் விரல்களில் தவழும்
எண்ணம் அதனில் அவிழும்
எட்டுத்திக்கையும் இணைத்து மகிழும்
எழுங்கள் எழுதுகோலைப் பிடிக்க
எழுதுங்கள் சரித்திரம் படைக்க
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!