எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்

எழுத்தாளர் சுஜாதா  புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். 

அவர் ஒரு பொறியியல் வல்லுநர். அறிவியலைத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறச் செய்தது அவரின் முக்கியமான பங்களிப்பாகும்.

அவரின் எழுத்துக்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உள்ளன.

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இயற்பெயர் ரங்கராஜன்வர் தன் மனைவியின் பெயரான சுஜாதாஎன்னும் புனைப்பெயரில் தன் படைப்புகளை எழுதி வந்தார்.

நாம் இக்கட்டுரையில் சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய படைப்புகளுள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

எழுத்தாளர் சுஜாதா பிறப்பு மற்றும் கல்வி

சுஜாதா 1935 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஸ்ரீநிவாஸ். இவரது தாயார் பெயர் கண்ணம்மா.

சுஜாதா தன் தந்தையின் பணியில் அடிக்கடி இடமாற்றம் ஏற்பட, ஸ்ரீரங்கத்தில் உள்ள தன் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்தார். இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் தன் பள்ளிப்படிப்பை முடித்தார்.

பின்னர் இவர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி.(இயற்பியல்) படிப்பை படித்தார். அதன் பின்னர் இவர் சென்னையிலுள்ள எம்..டி.யில் பி.டெக்.(மின்னணுவியல்) படிப்பையும் படித்தார்.

சுஜாதாவின் பணி

சுஜாதா முதலில் மத்திய அரசின் சிவில் ஏவியேஷன் துறையில் பணியாற்றினார். பின்னர் இவர் பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

இவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்து, உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

இவருக்கு ரங்கபிரசாத், கேசவ்பிரசாத் ஆகிய மகன்கள் உள்ளனர்.

சுஜாதாவின் எழுத்துப்பணி

சுஜாதாவின் முதல் கதை 1953இல் சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளியானது. இவருடைய இடது ஓரத்தில்என்ற சிறுகதை 1962இல் கல்கி இதழில் வெளியானது.

இவர் எழுதிய டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்குஎன்ற நாடகம் தொலைக்காட்சி தொடராக உருவானது.

இவர் குமுதம், ஆனந்தவிகடன் ஆகிய பத்திரிக்கைகளில் பல தொடர்கதைகளை எழுதி வந்தார்.

மேலும் இவர் கணையாழி இதழில் கடைசி பக்கங்கள் என்ற கட்டுரைத்தொடரை எழுதியுள்ளார்.

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்“, “ஏன்? எதற்கு? எப்படி?ஆகிய கட்டுரைத் தொடர்கள் மிகவும் பிரபலமானவை.

இவர் கணினியைப் பற்றி பல நூல்கள் எழுதினார். இவர் எழுதிய என் இனிய இயந்திரா“, “மீண்டும் ஜீனோம்போன்ற அறிவியல் கதைகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

சுஜாதா கொலையுதிர்காலம்என்ற துப்பறியும் நாவலை எழுதியுள்ளார்.

இவரது பல கதைகள் திரைப்படமாக உருவாக்கப்பட்டன. அவற்றுள் காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், ஆனந்த தாண்டவம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

இவர் ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, இந்தியன், முதல்வன், பாய்ஸ், எந்திரன் போன்ற பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் சுஜாதா பெற்ற விருதுகள்

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

சுஜாதா வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்து, உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தமைக்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக தேசிய அறிவியல் தொழில்நுட்பக்கழகம் இவருக்கு 1993ஆம் ஆண்டு விருது வழங்கி சிறப்பித்தது.

ஆனந்த விகடனில் வெளியான சுஜாதாவின் நாவல்கள் கனவு தொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம் ஆகியவற்றுக்காக விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம், சென்னை அண்ணாசாலையில் சுஜாதாவுக்கு கட்-‍‍ அவுட் வைத்து பெருமைப்படுத்தினார்.

இவ்வாறு எழுத்துலகில் சகலகலாவல்லவராக விளங்கிய சுஜாதா அவர்கள் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் உடல்நலக்குறைவினால் உயிர் நீத்தார். அவரது பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது.

நாமும் எழுத்தாளர் சுஜாதா படைப்புகளைப் படித்து பயன்பெறுவோம்.

பிரேமலதா காளிதாசன்

 

One Reply to “எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்”

  1. திருமதி பிரேமலதா அவர்களின் படைப்புகளை படித்து வருகின்றேன். அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.