செடியில் பூக்கள் பூத்ததே
சிட்டுப் புதரில் பாடுதே
படிக்க வேண்டும் எழுந்திரு
பாப்பா பாப்பா எழுந்திரு
வானம் கிழக்கில் வெளுத்ததே
மரத்தில் காக்கை கரையுதே
ஏனோ தூக்கம் எழுந்திரு
எழுந்து படிநீ எழுந்திரு
சேவல் கூவி அழைக்குதே
தெருவில் நாயும் குரைக்குதே
கூவிப் பாடம் படிக்கவேண்டும்
குழந்தாய் குழந்தாய் எழுந்திரு