எவர் கால் முதலில் பட்டது
இந்தப் பாதை உருவாக…
எவர் கால் முதலில் பட்டது
அருகிருக்கும் புற்கள் இன்றும் அருகிப்படர…
எவர் கால் முதலில் பட்டது
எறும்புகளும் இன்று வரை இனிதாக பயணிக்க…
எவர் கால் முதலில் பட்டது
பனித்துளியும் இன்று வரை அமைதியாய் தூங்க…
எதற்கும் எப்போதும் இடையூறில்லா பாதைகளே
சொர்க்கத்தின் படிக்கட்டுகள்…
காற்றைத் தடுத்து நீரைக் கெடுத்து
கற்களைக் குழைத்து கட்டும் சாலைகள்
( நாற்கர சாலைகள் )
சொர்க்க வழியை அடைக்கும்
இனிய வாழ்வுக்கு சுமையாய் இருக்கும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942