ஏக்கம் தீருமோ?

பலதூரம் நடந்து போன
பள்ளிக்கூடம் காணலங்க

வண்டி மாடு சந்தைக்கு போன
வழித்தடம் தெரியலைங்க

ஏரி குளம் மீன் பிடிக்கப் போன
தாத்தா இப்ப இல்ல

தபாலுக்காக காத்திருந்த
சைக்களும் தான் இங்கு இல்ல

வீடு தோறும் தென்னைமரம்
இருந்த தடம் தெரியலைங்க

மழை வரும் முன் மணக்கும்
மண் வாசனையும் காணாம போயிருச்சு

சொந்தம் பந்தம் சேர்ந்து
உண்ட காலம் மாறிடுச்சு

சுயநல சொந்தத்தால
உறவெல்லாம் விலகி போச்சு

ஏன் இந்த மாற்றமோ?
எத்தனை காலம் நீடிக்குமோ?

காலங்கள் ஓட ஓட
மனுசனும் மாறுறான்

மனுசன் செய்த தவறினால்
இயற்கை தான் அழுகுது

மாறிப்போன நினைவெல்லாம்
மீண்டும் எப்ப வருமோ?

கடந்து போன காலம் வாழ
மனதின் ஏக்கம் தீருமோ?

ஸ்ரீ கவி