என்றோ ஒருநாள்
எதுக்கும் உதவாது என்று
ஏளனமாய் தூக்கி எறிந்த ஒன்றை
தேவையெனத் தேடிக்கொண்டிருக்கிறாய்
அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தபடியே
நீ உமிழ்ந்தவை வழிந்த முகத்தோடு
கடந்து போன கால்களுக்குத் தெரியும்
விரட்டியடித்த விதங்களின் நோக்கங்கள்
அமிலம் தெளித்த வார்த்தைகளில்
உருக்குலைந்து போன மனதுள்ளே
துளிர்புகளை மீட்டுக் கொண்டிருக்கிறது
ஏதோ ஒன்று…
இப்போதும்
எப்போதும் போலவே இருக்கிறேன் நான்
எப்போதும் போலவே இப்போதும்
ஏதோ ஒன்றுக்காய்
பறந்து
வந்து கொண்டிருக்கின்றன உன் புறாக்கள்.
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250