மாட்டுக்காகப் போராடிய நாம்
மனித வாழ்க்கைக்காக ஏன் இல்லை?
அடையாளத்துக்காக போராடிய நாம்
அழிவுக்காக ஏன் இல்லை?
எங்கோ நடந்த தீவிரவாதத்திற்காக
கருணை காட்டிய நாம்
நம்நாட்டில் நடக்கும் சித்திரவதைக்கு
ஏன் கருணை காட்டவில்லை?
வந்தோரை வாழ வைக்கும் ஊர்
என்று பெருமை நமக்கு!
இப்போதோ நம் ஊரில் வாழ
நமக்கு இடம் இல்லை.
– ஹேமா ரூபிணி