ஏப்ரல் 18 ஒரு கவிதை.
18-04-2019 அன்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழ் நாட்டில் நடைபெற்றது. அது தொடர்பான கவிதை.
ஏப்ரல் 18
உன் வாழ்வில் படிக்கட்டு
எழுந்து நிமிர்ந்து நடைபோட்டு – நீ
செலுத்தும் வாக்கு தீமைக்கு வேட்டு
இழந்ததை மீட்டிட
இருப்பதைக் காத்திட
பழமையைப் போற்றிட
பாழும் தீமையை அகற்றிட
மருத்துவ கல்வி நமக்கில்லை
மறைமுக வேலை வாய்ப்பில்லை
உருப்படியாக எதுவும் இங்கில்லை
ஊருக்குள் நல்லதை காணவில்லை
விளைநிலம் எல்லாம் ரோடாக
வீசும் காற்றும் நஞ்சாக
ஹைட்ரோ கார்பன் உருவாக
நம்கழனிகள் எரியும் தனலாக
உயர்ந்த மலைகள் உடைத்திட்ட
உள்ளுக்குள் பூமியைத் துளையிட்ட
மண் பயனுற ஓடிய ஆறுகளை
மணலின்றி மலடாய் ஆக்கிய
கூட்டத்தை விரட்ட
ஏப்ரல் 18
உன் வாழ்வில் படிக்கட்டு
எழுந்து நிமிர்ந்து நடைபோட்டு – நீ
செலுத்தும் வாக்கு தீமைக்கு வேட்டு
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!