வீட்டு முற்றத்தில் தொட்டி கட்டி நீர் நிரப்பி சிட்டுக்குருவியை அழைக்கும் பாடல். முதல் மரியாதை திரைப்படப் பாடலோடு இணைத்துப் பார்த்தால் சிறப்பு.
ஏய் குருவி! சிட்டுக்குருவி
உன் ஜோடியோட நீ இங்கே வந்து
நீராடுவது ரொம்ப நன்று!
சின்னத் தொட்டி
நீயும் ரொம்ப சுட்டி!
ஏய் குருவி சிட்டுக்குருவி!
ஐயா நாட்டுக்குள்ளே பல டவரிருக்கு
அது இல்லையின்னா ஏது நெட்டுவொர்க்கு
செல்போனில் பேச பல டவருங்க வேணும்!
அந்த அலையால நீயும் இங்கே காணாமப் போன
ஏய் குருவி சிட்டுக்குருவி!
என் வீட்டுக்குள்ள உனக்கு கூடு இருக்கு
உஞ்ஜோடியோட நீ இங்கு வாயேன்!
சின்னத் தொட்டியுந்தான் இருக்கு
வந்து குளிச்சிட்டுப் போயேன்!
ஏய் குருவி சிட்டுக்குருவி!
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294
மறுமொழி இடவும்