முராரே ! நீ செய்த மந்திரமோ
மூவடி அளந்தவனே, நீ செய்த தந்திரமோ
ராதையின் மனதை கவர்ந்தவனோ
கோதையின் மாலையில் மனம் சாய்ந்தவனோ
ராகவனே உன்னை தொடர்ந்தவளோ
மிதிலையின் நாயகி ஆனவளோ
நரசிம்மம் உருக் கொண்டு வந்தவனோ
சிறு பாலகன் பக்தியில் தோய்ந்தவனோ
மீனமாய், ஆமையாய் ஆனவனோ
ஏனமாய் எம் இடர் தீர்ப்பவனோ
பரசு இராமனாய் தந்தை சொல் காத்தவனோ
ஆனிரைக் காத்தவன் நம்பி மூத்தவனோ
ஆலிலைத் துயிலவே நாள் இருக்கு
கலியின் உச்சியிலே உனது ஒருங்கிணைப்பு
வேறு இடம் இன்னுமோ வழி எதற்கு ?
ஏழுலகு உண்டவன் துணை இருக்கு!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!