ஒரு புதிய பேனாவைத் தொடங்க
நிதானமிழக்காத
எனது கையெழுத்தினால்
உன் பெயரை எழுதப் பார்த்தேன்!
வெற்றுத் தாளெங்கும்
எப்போதும் இருந்திராத
மொழியொன்று பிறந்தது!
தணிக்கை இல்லாத எண்ணங்கள்
கலங்கிச் சிதறின!
இலக்கணமற்ற வாக்கியம்
முன்பின்னாய் நெளிந்தது!
எழுத்துப் புரியாத சொற்கள்
பித்துப் பிடித்தாடின!
மை முடிந்த பேனாவை
எறிந்துவிட்டு
தீர்ந்துபோன காகிதத்தைக்
கிழித்து எரித்தேன்!
உயர எழுந்த
நெருப்புத் தனலில் தோன்றியது
நான் எழுதிய ஐந்து எழுத்துக்கள்!
– சங்கர் (கோபிசெட்டிபாளையம்)
shankar46nk@gmail.com
மறுமொழி இடவும்