ஒத்திகை – சிறுகதை

சாம்பு சாஸ்திரிகள் சந்தியாவந்தனத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு ‘சிவ சம்போ, மகாதேவா’ என முனங்கியபடியே பஞ்ச பாத்திரத்தை உத்தரணியுடன் சேர்த்துப் பிடித்தவாறே அதிலிருந்து ஜலத்தைத் துளசி மாடத்தில் விட்டார். அவரது வாய் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தது. வலது கை விரல்கள் எண்ணியபடியும், எண்ணி முடித்ததற்கு அடையாளமாக இடது கை விரல்கள் மடங்கிக் கொண்டும் இருந்தன. மங்களம் சமையலறையில் தயார் செய்து கொண்டிருந்த வத்தல் குழம்பு சாம்பு சாஸ்திரிகளை சீக்கிரமாக ஜபத்தை முடிக்கச் சொல்வது போல் … ஒத்திகை – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.