ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018 பட்டியலில் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 03.04.2018 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2018-ஆம் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களுரு 82.16 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை 81.39 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் தமிழ்நாட்டைச் சார்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள்

வரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்
1 இந்திய தொழில் நுட்ப கழகம், சென்னை 81.89 2
2 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 62.82 10
3 அமிர்தா விஸ்வவித்யா பீடம், கோயம்புத்தூர் 58.46 15
4 பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 55.08 20
5 வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 52.68 24
6 சென்னை பல்கலைக்கழகம், சென்னை 51.52  29
7 தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி 51.38 31
8 பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 50.74 35
9 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 49.22 40
10 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 48.25 43
11 சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்திரா), தஞ்சாவூர் 46.33 54
12 ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 45.29 62
13 எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 45.17 63
14 பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 44.94 64
15 சத்திய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 44.34 68
16 சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 44.00 70
17 ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் 43.60 73
18 பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர் 43.24 75
19 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை 42.98 81
20 தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை 41.73 92
21 பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி 41.63 94
22 தியாகராஜர் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை 41.41 95

 

இந்திய அளவில் தமிழக கல்வி நிறுவனங்கள் நல்ல தரவரிசையைப் பெறவும், இதைத் தொடர்ந்து தக்க வைக்கவும் இன்னும் முன்னேறவும் முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

Leave a comment

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: