காலம் தப்பிய
ஒரு நாளில்
வெய்யிலைப் போல்
மழை பெய்து கொண்டிருந்தது
இன்றும் நேற்றும்
ஒரே நாள் அல்ல
என்று வெவ்வேறு நாட்களில்
ஒரே ஒரு ஆள்
சொல்லிக் கொண்டிருந்தான்
அவன் மனதில்
தோன்றிய அனைத்தும்
ஈரமாகவே இருந்தது
அவன் நடக்கும்
பாதையிலிருந்த மண் துகள்கள்
அவனுக்கு புதிய அமைதியைத் தந்தது
வெவ்வேறு நினைவுகள்
வேறு வேறு எண்ணங்களாக
உருமாறி அலைகின்றது
இன்று போல்
இன்னொரு நாள் இருக்காது
ஆற்றில் இறங்கியவனின்
அனுபவம் தனித் தனி
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!