ஒரு துளி மையில் காட்டிடு வீரத்தை
வெறும் காசுக்கு விலையென போகாதே
பெருமை கொண்டே எழுந்திடு நீயும்
புலரும் பொழுது எல்லாம் சிறப்பாக
வெறுமனே வாயில் வடைசுடும் வீரனை
விரட்டிடும் காலம் இதுதானே
வெறுப்பினைக் காட்டியே செலுத்திடு வாக்கினை
விளைந்திடும் நன்மைகள் நமக்காக
தெருக்களில் பள்ளிக்கூடங்கள் கட்டியே
திசையெட்டும் பரந்த தமிழினமே
குறுகி கிடப்பதை மாற்றிட என்றே
செலுத்திட வேண்டும் வாக்கினையே
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!