துப்பாக்கி ரவைகள் கிழித்த சதைகளைத்
தோரணமாக்கி அலங்கரிக்கப்படுகிறது
இந்த நரகத்தின் வாசல்!
கி.மு.வையும் கி.பியையும் பிறைக் குறிக்களிட்டு
நட்சத்திரத்தின் பெருக்கலையும் சிலுவையின்
கூட்டலையுமிட்ட காலத்தின் கணக்கு பெரும் பிழை!
மரண ஓலங்களுக்கிடையில் கர்ப்பிணி பிரசவிக்கும்
சிசுவின் கதறல் எங்கோ மன்னிக்கப்பட்ட
பாவங்களின் சாபக் கூடுகை!
அந்தச் சிசுவிற்கும் பிரார்த்திக்கத் தெரிந்திருந்தால்
கேட்பது நிச்சயம் ஒரு நாடாக இருக்காது
இவர்களுக்கான மன்னிப்பு தான்!
ச.குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com