ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்ற இந்த பதிவில், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் மாங்காய் ஊறுகாய் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

மாங்காய் என்பது சீசனில் மட்டுமே கிடைக்கக் கூடிய உணவுப் பொருளாகும்.

சீசன் உணவுப் பொருளான மாங்காயை, இப்பதிவில் கூறிய முறைப்படி ஊறுகாய் தயார் செய்து, அதனை பக்குவமாகப் பயன்படுத்தினால், நீண்ட நாட்கள் ஊறுகாய் கெடாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்

மாங்காய் – 1 கிலோ கிராம்

கல் உப்பு – 100 கிராம்

மண்டை வெல்லம் – 150 கிராம்

மிளகாய் வற்றல் பொடி – 100 கிராம்

கடுகு பொடி – 50 கிராம்

வெந்தய பொடி – 50 கிராம்

கட்டிப் பெருங்காயம் – 5 கிராம்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 100 கிராம்

கடுகு – 3 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

மாங்காயை கழுவி நன்கு துடைத்து விட்டு, பெரிய துண்டுகளாக வெட்டவும்.

 

மாங்காயை தண்ணீரில் அலசும் போது
மாங்காயை தண்ணீரில் அலசும் போது

 

மாங்காயை உலர்த்தும் போது
மாங்காயை உலர்த்தும் போது

 

பெரிய துண்டுகளாக்கப்பட்ட மாங்காய்
பெரிய துண்டுகளாக்கப்பட்ட மாங்காய்

 

நறுக்கிய மாங்காய் துண்டுகளுடன் கல் உப்பு சேர்த்து 24 மணி நேரம் ஊற வைக்கவும்.

உப்பு மாங்காயுடன் சேர்ந்து கரைந்து தண்ணீர் விடும்.

 

பெரிய துண்டுகளாக்கப்பட்ட மாங்காயுடன் உப்பு சேர்த்தும்
பெரிய துண்டுகளாக்கப்பட்ட மாங்காயுடன் உப்பு சேர்த்தும்

 

ஊறிய மாங்காய்
ஊறிய மாங்காய்

 

மாங்காயில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு, மாங்காய் துண்டுகளை தனியே எடுத்து, வெயிலில் சுருள காய வைக்க வேண்டும்.

 

மாங்காயை காய வைக்கும்போது
மாங்காயை காய வைக்கும்போது

 

வடித்த உப்பு மாங்காய் தண்ணீர்
வடித்த உப்பு மாங்காய் தண்ணீர்

 

காய்ந்த மாங்காய் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 

காய்ந்த மாங்காய் துண்டுகள்
காய்ந்த மாங்காய் துண்டுகள்

 

கடுகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

 

வறுத்த கடுகு
வறுத்த கடுகு

 

வறுத்த வெந்தயம்
வறுத்த வெந்தயம்

 

கடுகு பொடி
கடுகு பொடி

 

வெந்தயப்பொடி
வெந்தயப்பொடி

 

கட்டிப் பெருங்காயத்தை வெயிலில் காய வைத்து, சுத்தியால் நொறுக்கி மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

 

பெருங்காய பொடி
பெருங்காய பொடி

 

மண்டை வெல்லத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும்.

 

பொடியாக்கப்பட்ட மண்டை வெல்லம்
பொடியாக்கப்பட்ட மண்டை வெல்லம்

 

மிளகாய் வற்றலை வெயிலில் காய வைத்து, காம்பு நீக்கி பொடித்துக் கொள்ளவும்.

 

காய வைக்கப்பட்ட வற்றல்
காய வைக்கப்பட்ட வற்றல்

 

அரைத்த மிளகாய் பொடி
அரைத்த மிளகாய் பொடி

 

கறிவேப்பிலையை அலசி உருவி காய விடவும்.

 

அலசி உருவிய கறிவேப்பிலை
அலசி உருவிய கறிவேப்பிலை

 

வடித்து எடுத்த மாங்காய் உப்புத் தண்ணீரில், பொடித்த மண்டை வெல்லத்தை சேர்த்து ஒருசேரக் கரைந்ததும், வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும்.

 

வடிகட்டப்பட்ட உப்பு மாங்காய் மண்டை வெல்லக் கரைசல்
வடிகட்டப்பட்ட உப்பு மாங்காய் மண்டை வெல்லக் கரைசல்

 

வடித்த தண்ணீரை அடுப்பில் வைத்து ஒருகொதி வந்ததும் இறக்கவும்.

அதனுடன் மிளகாய் வற்றல் பொடி, கடுகு பொடி, வெந்தயபொடி, பெருங்காயப்பொடி, பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

 

பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகளை கரைசலில் சேர்த்ததும்
பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகளை கரைசலில் சேர்த்ததும்

 

பொடிவகைகளைச் சேர்த்து கிளறும் போது
பொடிவகைகளைச் சேர்த்து கிளறும் போது

 

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஊறுகாயில் கொட்டி, ஒருசேரக் கிளறவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

தாளித்து எண்ணெயைக் கொட்டி கிளறியதும்
தாளித்து எண்ணெயைக் கொட்டி கிளறியதும்

 

கலவை உள்ள பாத்திரத்தின் வாயினை துணியால் கட்டி வெயிலில் 3 முதல் 4 நாட்கள் பகல் முழுவதும் வைத்து எடுக்கவும்.

 

வெயிலில் காய வைக்கும் முன்பு ஊறுகாய்
வெயிலில் காய வைக்கும் முன்பு ஊறுகாய்

 

வெயிலில் காய வைக்கும் போது
வெயிலில் காய வைக்கும் போது

 

சுவையான ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய் தயார்.

 

ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய்
ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய்

 

காய்ந்த கண்ணாடி பாட்டிலில் ஊறுகாயை முக்கால் பாகம் நிரப்பி, காற்றுப் புகாதவாறு மூடி வைக்கவும். தேவைப்படும் சமயத்தில் சின்ன பாட்டிலில் எடுத்து உபயோகிக்கவும்.

குறிப்பு

நல்ல புளிப்பான மாங்காய்களை ஊறுகாய்க்குத் தேர்வு செய்யவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.