‘அறம் செய்ய விரும்பு’ என்று ஆத்திசூடி பாடிய ஒளவையாரைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிவார்கள். ஆனால், ஒளவையார் மூன்று பேர் என்பதை பலரும் அறியாமல் இருக்கின்றார்கள்.
அதியமானிடம் அன்பு காட்டி நெல்லிக்கனியைப் பெற்ற புறநானூற்று ஒளவையார் பழம்பெரும் ஒளவையார். அவருடையகாலம்கி.மு.மூன்றாம் நூற்றாண்டு.
கம்பனிடம் கவிதைப்போர் நடத்திய ஒளவையார் இடைக்காலத்தவர். பிற்காலச்சோழனின் ஆட்சியில் வாழ்ந்தவர். இவர் பாடிய தனிப்பாடல்கள் பல, இன்னும் இலக்கியச் சுவையுடன் திகழ்கின்றன. இவருடைய காலம் கி.பி.பத்தாம் நூற்றாண்டு.
பிற்கால ஒளவையார் ‘ஆத்திசூடி’ ஒளவையார்., எளிய நடையில் உயர்ந்த கருத்துகளைக் கூறியவர். இவருடைய மொழிநடையைக் கருத்தில் கொண்டு, இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவராகக் கருதலாம்.
‘ஒளவைப்பாட்டி நம்பாட்டி’ என்று ஒளவையார்கள் பாட்டியாகவே கருதப்பட்டு நமது மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், இவர்கள் பாடல்களை ஆய்வு செய்தால், இவர்கள் பாட்டிகள் அல்லர் எனத் தெரியவரும்.
மறுமொழி இடவும்