ஓசோன்
அகச்சிவப்புக் கதிரினையே
அடக்கிவைத்த ஆணழகனே
குளிர்விப்பான் அழகிகளால்
ஏனோ சிறிதுசிறிதாய்
அரித்துக் கொண்டாய்
உன் மேனியையே…
வயோதிகன்
போனால் வராததை விட்டு விட்டேன்
வந்தால் போகாததைத் தொட்டு விட்டேன்
தொட்டு விட்ட பாவத்தால்
இட்டுக் கொண்ட பட்டப் பெயர்
கண்டதும் காதல்
புத்தம் புதிதான ரத்தவோட்ட நாளங்கள்
என்று மில்லாமல் இன்று மட்டும் ஏனோ…
அவளைக் கண்டதுமே
சிறுவோடைத் தடமொன்றும் பெருவெள்ள மாகவே
அழுத்தங்கள் அதிகமான மின்சாரம் பாய்ந்ததேன்?
சிவா.தேவராசு
ஓசூர்
கைபேசி: 9941503810
மின்னஞ்சல்: devakalai006@gmail.com
மறுமொழி இடவும்