ஓடிஓடி ஆனதுவே ஓடை நீர்
ஓடிஓடி ஆனதுவே ஓடை
காடுமேடு பெய்த மழை வெள்ளம்
கரைத்து கரைத்து வைத்தபெரும் பள்ளம்
ஓடை பலஒன்று சேர்ந்தால் ஆறாம்
ஓடிஓடி ஊட்டும்பல ஊராம்
கல் இடுக்கில் பாய்ந்துபாய்ந்தே பாடும்
நன்செய் புன்செய் கண்டுகடல் ஓடும்
ஓடை இல்லா ஊர்கள் இல்லை
நீர்வறண்டு போனால்வரும் தொல்லை
மறுமொழி இடவும்