ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
நாட்டை உயர்த்தவே ஓட்டு போடுவோம்
மக்களே ஆட்சி செய்வது ஜனநாயகம்
அதில் உலகில் முதன்மை நம்பாரதம்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
தனிநபர் துதிபாட மாட்டோம்
இந்நாட்டு மன்னர்தானே எல்லோரும்
என்றும் அதை மறக்க மாட்டோம்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
கயவர் கையில் நாட்டைக் கொடுக்க மாட்டோம்
நம்மை ஏமாற்ற நினைக்கும் கூட்டம்
ஏமாந்து போக ஓட்டு போடுவோம்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
துட்டுக்கு விலைபோக மாட்டோம்.
மதம் மொழி இனம் சாதி மறப்போம்
மனிதரில் நல்லோரைத் தேர்ந்தெடுப்போம்.
ஓட்டு போடுவோம்; ஓட்டு போடுவோம்.
கட்சியின் கொள்கையை அறிவோம்
வேட்பாளர் தன்மை தெரிவோம்
ஆராய்ந்தே தெளிவாய் முடிவெடுப்போம்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
நல்லவர் நம்மை ஆளட்டும்
வல்லவராய் அவர் திகழட்டும்
வறுமை நம்மை விட்டு ஓடட்டும்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
கல்வி மருத்துவம் சிறக்கட்டும்
தொழில்கள் நாட்டில் பெருகட்டும்
விவசாயம் காக்க ஓட்டு போடுவோம்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
இளைஞர்க்கு வழிகாட்டுவோம்
வேலைவாய்ப்பு பெருகட்டும்
வாழ்வில் உயர ஓட்டு போடுவோம்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
சுரண்டல் நாட்டில் ஒழியட்டும்
சமத்துவம் நம்மில் நிலவட்டும்
ஒன்றாய் நன்றாய் வாழ ஓட்டு போடுவோம்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
உலகின் ஒளியாய் பாரதம் திகழும்
விரைவில் அந்தநாள் வரும்
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!