மூன்றாம் நெம்பர் பிளாட்பார்மில்
மிரட்சியோடிருந்தது குழந்தை
தாயின் தோளில் தலைசாய்ந்தபடி
எதிர்படும் எவரிடத்திலுமில்லை
குழந்தையை எதிர்கொள்ள
போதிய அவகாசம்
அடுத்தடுத்த நொடிகளிலேயே
தன் வாழ்வு நிலைப்பதாக
எண்ணி பெரியவர்கள்
விரைகின்றனர்
அடுத்தடுத்த நொடிகளுக்கு
சிறு கையசைப்பை
குறும்பான முகச்சுழிப்பை
மகிழ்விக்கும் விளையாட்டை
தேடும் அக்குழந்தை
சூழலின் நெருக்கடி
புரியாமல் துயர்படுகிறது
வாழ்வின் கசடு படியாத
காலத்தில் வாழும்
அக்குழந்தை – பின்பு
எதன் பொருட்டும் தன்னை
இழக்க விரும்பாது
தேடி எடுத்துக் கொண்டது
பாதையில் கிடந்த
‘டிக் டேக்’ டப்பி ஒன்றை
க. சம்பத்குமார்
அவிநாசி
கைபேசி: 98658 25225
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!