இல்லாமை சொல்லி ஒருவர்தம்
பால்சென்(று) இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்
பால்ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே
பெருஞ்செல்வம் அடைய
வையம் துரகம் மதகரி
மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை
ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்
தாமரைக்(கு) அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்குள
வாகிய சின்னங்களே
சகல செல்வங்களையும் அடைய
செப்பும் கனக கலசமும்
போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி
அணிதிரளக் கொப்பும்
வயிரக் குழையும்
விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தே(ன்)
என் துணைவிழிக்கே
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!