ஏழைகளின் அரசு
ஏழைகளுக்கு தயக்கமே இல்லை!
அரசாங்கத்தை கண்டால் மட்டும் ஏதோ…
சுயநலம்
அனைவருமே சுயநலவாதிகள் தான்
உறங்கும்போது
கடலழகி
கடலழகி அலையாக தீண்டிக் கொண்டிருக்கிறாள்
மணல் கனமாகிறது
கனமான மனம் லேசாகிறது
சாக்லேட் உறை
வெளிநாட்டு ஒசத்தி சாக்லேட்!
பளபளவென மின்னும் அதனின் உறை
சாக்லேட் சுவைத்துப் பின்
உறை ரோட்டில் வீசி எறியப்பட்டது
குப்பை பொறுக்கும் சிறுமிக்கு
பளபளவெனும் உறை கண்ணை பறித்தது
உறை அன்போடு பத்திரப்படுத்தப்பட்டது
மழைக் கார்
மழை ஜோன்னு பெய்யுது…
ஏன் இவ்வளவு மெல்லமா போற?
கார தேங்கிருக்குற தண்ணில
ஏத்து ஸ்பீடா! பீச்சியடிக்கும்!
என்றாள் அவனுடைய அன்பு தோழி
சேறு கலந்த தண்ணீர் பாவமாக
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த
பாதசாரிகள் மீதும் நடைபாதையை
வீடாக கொண்டிருந்தவர்கள் மீதும்
பீச்சிட்டது
அன்புத்தோழன்
அன்புதோழியின் பரம்பரையே
பாதசாரிகள் வாயில் நாராசமானது
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768
எல்லாக் கவிதைகளும் முதிர்ச்சியான வரிகளால் பின்னப்பட்டுள்ளன…
மழைக் கார் கவிதை அபாரம்…
நிறைய எழுது சஞ்சய்…
சினிமா என்கிற பெரிய விரைவு கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டு
இலக்கியப் படை எட்டுத் திக்கும் சென்றடையும்…
வெற்றி உறுதி