கடலை கறி செய்வது எப்படி?

கடலை கறி கொண்டைக் கடலையைக் கொண்டு செய்யப்படும் சுவையான தொட்டு கறி ஆகும். இதனை சுவையாக வீட்டில் செய்தே அசத்தலாம்.

கடலை கறி செய்வதற்கு வெள்ளை வெள்ளை கொண்டைக் கடலையைப் பயன்படுத்தியுள்ளேன்.

விருப்பமுள்ளவர்கள் வெள்ளை கொண்டைக் கடலைக்குப் பதிலாக கறுப்பு கொண்டைக் கடலையைப் பயன்படுத்துங்கள்.

இனி எளிமையான வழியில் கடலை கறி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்தேவையான பொருட்கள்

கொண்டை கடலை – 150 கிராம்

பெரிய வெங்காயம் – ஒரு எண்ணம் (பெரியது)

தக்காளி – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

தேங்காய் – 1/4 மூடி (சிறியது)

முந்திரி பருப்பு – 4 எண்ணம் (முழு பருப்பு)

இஞ்சி – கட்டை விரல் அளவு

வெள்ளை பூண்டு – 3 பற்கள் (பெரியது)

புதினா இலை – 10 எண்ணம்

மல்லி இலை – 1/2 கொத்து

மசாலா பொடி – 2 ஸ்பூன்

கரம் மசாலா – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

கடுகு – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

செய்முறை

முதலில் கொண்டை கடலையை கழுவி பின்னர் தண்ணீரில் முழுவதும் மூழ்குமாறு சுமார் 10 மணி நேரம் ஊற வைக்கவும்.

 

கொண்ட கடலை ஊறும் போது
கொண்ட கடலை ஊறும் போது

 

பின்னர் கொண்டை கடலையை ஊற வைத்த தண்ணீருடனே, தேவையான உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

கொண்டை கடலையை லேசாக நசுக்கினால் மாவாகும் பதத்திற்கு வேக வைத்து ஆறவிடவும்.

 

அவித்த கொண்டை கடலை
அவித்த கொண்டை கடலை

 

இஞ்சி, வெள்ளை பூண்டினை தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளவும்.

புதினா இலை, கொத்த மல்லி இலையை அலசி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

தக்காளியை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவும்.

பெரிய வெங்காயத்தை சுத்தம் செய்து சிறுசதுரத் துண்டுகளாக வெட்டவும்.

தேங்காய், முந்திரி பருப்பு சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி, வெள்ளை பூண்டினை விழுதாக்கிக் கொள்ளவும்.

அவித்து ஆறிய கொண்டை கடலையில் மூன்றில் ஒரு பங்கினை விழுதாக்கிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்ததும்
தாளிதம் செய்ததும்

 

பின்னர் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயத்தை வதக்கும் போது
வெங்காயத்தை வதக்கும் போது

 

வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

இஞ்சி, பூண்டினை சேர்த்ததும்
இஞ்சி, பூண்டினை சேர்த்ததும்

 

ஒரு நிமிடம் கழித்து தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

தக்காளி விழுதினைச் சேர்த்ததும்
தக்காளி விழுதினைச் சேர்த்ததும்

 

தக்காளி பச்சை வாசனை நீங்கியதும் அதனுடன் புதினா இலையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

 

புதினா இலையைச் சேர்த்ததும்
புதினா இலையைச் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் தேங்காய் முந்திரி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

தேங்காய் முந்திரி விழுதினைச் சேர்த்ததும்
தேங்காய் முந்திரி விழுதினைச் சேர்த்ததும்

 

இருநிமிடங்கள் கழித்து அரைத்த கொண்டை கடலையை சேர்த்து வதக்கவும்.

 

கொண்டை கடலை விழுதினைச் சேர்த்ததும்
கொண்டை கடலை விழுதினைச் சேர்த்ததும்

 

பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து அதனுடன் மசாலா பொடி, கரம் மசாலா பொடி, உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடி விடவும்.

 

பொடிவகைகளைச் சேர்த்ததும்
பொடிவகைகளைச் சேர்த்ததும்

 

ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து, நறுக்கிய கொத்த மல்லி இலையை தூவி ஒருசேர கிளறவும்.

 

குக்கரைத் திறந்ததும்
குக்கரைத் திறந்ததும்

 

மல்லி இலையைச் சேர்த்ததும்
மல்லி இலையைச் சேர்த்ததும்

 

சுவையான கொண்டை கடலை கறி தயார்.

இதனை ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

 

ஆப்பத்துடன் கறி
ஆப்பத்துடன் கறி

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்கு பதிலாக மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரக பொடி சேர்த்து கொண்டைக்கடலை கறியை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.