கடலை பருப்பு குழம்பு செய்வது எப்படி?

கடலை பருப்பு குழம்பு அருமையான எளிதில் செய்யக்கூடிய குழம்பு வகை ஆகும். இதனை திடீரென விருந்தினர் வருகையின் போது விரைந்து செய்து அசத்தலாம்.

இக்குழம்பினை கொத்து பருப்பு என்றும் கூறுவர். எங்கள் பகுதியில் திருமணம், நிச்சயம் போன்ற விசேச வீடுகளிலும் இதனைச் செய்து பரிமாறுவர்.

இனி சுவையான கடலைப் பருப்பு குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – 100 கிராம்

மசாலா பொடி – 1 1/4 ஸ்பூன்

சீரகம் – 3/4 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் – 1/4 மூடி (பெரியது)

தாளிதம் செய்ய

சின்ன வெங்காயம் – 3 எண்ணம்

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

மிளகாய் வற்றல் – 1 எண்ணம் (பெரியது)

நல்ல எண்ணெய் – 2 1/2 ஸ்பூன்

கடலை பருப்பு குழம்பு செய்முறை

கடலை பருப்பினை அலசி தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற விடவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.

பின்னர் பருப்பு மற்றும் தண்ணீரை குக்கருக்கு மாற்றவும்.

பருப்புடன் சீரகம், மசாலா பொடி சேர்த்து குக்கரினை மூடி விடவும்.

 

சீரகம், மசாலா பொடி சேர்த்ததும்
சீரகம், மசாலா பொடி சேர்த்ததும்

 

குக்கரில் ஒரு விசில் வந்ததும், அடுப்பினை சிம்மிற்கு குறைத்து, ஏழு நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து பார்க்கவும்.

 

குக்கரைத் திறந்ததும்
குக்கரைத் திறந்ததும்

 

பருப்புடன் தேவையான உப்பினை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் சேர்த்து காய விடவும்.

பின்னர் அதனுடன் சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, உருவிய கறிவேப்பிலை, கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்க்கவும். கடுகு வெடித்ததும் தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

தாளிதத்தை பருப்புடன் சேர்த்ததும்
தாளிதத்தை பருப்புடன் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிளறவும்.

 

தேங்காய் துருவலைச் சேர்த்ததும்
தேங்காய் துருவலைச் சேர்த்ததும்

 

சுவையான கடலை பருப்பு குழம்பு தயார்.

 

சுவையான கடலை பருப்பு குழம்பு
சுவையான கடலை பருப்பு குழம்பு

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தக்காளி பழத்தினை சேர்த்து பருப்பு குழம்பினை தயார் செய்யலாம்.

குக்கரைத் திறந்து பார்க்கும்போது கடலை பருப்பு வேகாமல் இருந்தால் மீண்டும் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.