கடவுச்சொல் பாதுகாப்பு நமது டிஜிட்டல் வாழ்வை சிறப்பாக்கும்.
இணைய உலகில் கடவுச்சொல் (password) என்பது மிகவும் இன்றியமையாதது.
அது கடினம் ஆனதாகவும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத /கணிக்க முடியாத அளவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலமுறை வல்லுநர்களால் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.
இருந்த போதிலும் ஆன்லைனில் உலா வரும் நபர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை என்று அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவான எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சொற்களையே அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
ஆனால், சிலர் அடிக்கடி அதனை மாற்றிக் கொண்டாலும் கூட வலிமையான சொல்லை பயன்படுத்துவது குறைவாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நார்டுபாஸ் (NordPass) என்னும் டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட உலக அளவிலான ஆய்வில், இணைய பயனர்கள், பயன்படுத்திய கடவுச் சொற்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வியப்புக்குரிய அளவில் பாஸ்வேட் (password) என்கிற சொல்லையே 50 லட்சம் நபர்கள் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
இது தவிர, guest, qwerty, 123456 என்றெல்லாம் பயன்படுத்தி உள்ளனர். இந்தியர்களில் பலர் பிக் பாஸ்கட் (big basket) என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர் என்பது அறியப்பட்டுள்ளது.
எப்படி இருக்க வேண்டும் கடவுச்சொல்?
எளிதான சொற்களைக் கடவுச் சொல் ஆக வைத்துக் கொண்டால், இணையக் கணக்குகளை ஹேக் செய்பவர்களின் பணி எளிதாகி விடும்.
ஆங்கில எழுத்துகள், எண்கள் , குறிகள் எனப்படும் கேரக்டர் ஆகியவற்றை கலந்து கடவுச் சொல்லை உருவாக்கிக் கொள்வதே சாலச் சிறந்தது / வலிமையானது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தனி நபர்களுக்கு மட்டும் அல்ல. அதிக அளவில் கையாளப்படும் நிறுவனங்கள் / அமைப்புகளின் மின் அஞ்சல் உள்ளிட்டவைக்கும் பொருந்தும்.
வரும் முன் காப்பதே சிறந்தது.
எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின் அஞ்சல்: mkavi62@gmail.com