மைக்கலாஞ்சலோ தலைசிறந்த ஓவியர் மற்றும் சிற்ப கலை வல்லுநர். ஒரு தேவாலயத்தின் உட்புறமாக இயேசு வரலாற்றினை ஓவியமாக வரைய ஒப்புக் கொண்டார்.
குழந்தை இயேசுவுக்காக மாடலாக, நல்ல அழகிய சாந்தமான கருணை உணர்வுடன் கூடிய முகமுடைய சிறுவர்களை பல இடங்களில் தேடி, ஒரு சிறுவனை தேர்வு செய்து குழந்தை இயேசுவை ஓவியமாக உயிர்ப்பித்தாராம்.
அதன் தொடர்ச்சியாக யூதாஸ் முகத்தை தேடி பல ஆண்டுகள் அலைந்தாராம். யூதாஸ் என்ற கொடியவன் இயேசுவோடு 12 சீடர்களில் ஒருவராக இருந்தவன். அவன் தான் 30 வெள்ளிக் காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன். அதன் பின்னர் இயேசு சிலுவையில் அறையப் பட்டார்.
20 ஆண்டு காத்திருப்புக்கு பின் சிறைச்சாலை ஒன்றில் தான் தேடும் யூதாஸ் முகத்தை கண்டறிந்து உரிய அனுமதி பெற்று அந்த மனிதனைக் கொண்டு யூதாஸை வரையலானாராம் மைக்கலாஞ்சலோ.
அப்போது அந்த கைதி, “20 ஆண்டுகளுக்கு முன்னர் என்னை வைத்து தான் இயேசுவை வரைந்தீர்கள். இப்போது யாரை வரையப் போகிறீர்கள்?” எனக் கேட்டாராம்.
அதை கேட்டு அதிர்ந்து போனார் மைக்கலாஞ்சலோ.
எந்த குழந்தையும் நல்ல குழந்தையே மண்ணில் பிறக்கையிலே …
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் வாழ்வுச்சூழலின் தாக்கத்திலே…
நல்ல உறவுகளும் நல்ல நண்பர்களும் இல்லாமையே யூதாஸைக்களை உருவாக்குகின்றன.
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!