நம் தாத்தா பாட்டி சொன்ன சொல்லிக் கேட்ட கதைகள் ஏராளம் ஏராளம்.
அந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது.
நான் ஒருநாள் என் பாட்டியிடம் கேட்டேன். “கடவுள் யார்?” என்று.
“கண்களை மூடிப்பார் கடவுள் தெரிவார்!” என்றார்.
கண்களை மூடினேன்.
“தெரியவில்லை!” என்றேன்.
திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!
“நான் கவிஞர் இல்லை கடவுளை காண!” என்றேன்.
தொடர்ந்தது என் இமைகள்; கடந்தது என் கற்பனைகள்.
இப்போது ஒரு வினவல்;
“எப்படி அறிவது?”
பாட்டி எனக்கான வைத்தியத்தை கொடுத்தாள்.
“தெரிதலில் தெளிதல் பெற, அறிவதில் ஆர்வம் வேண்டும். அந்த அறிதல் தொடர்ந்தால் கவிஞரே கடவுள்!” என்றாள்.
என்’ அநுபூதி’ சொன்னது.
நீ படைக்கப்பட்டு இருக்கிறாய்
உன் எழுதலும் வீழ்தலும்
உன் சக படைப்பின் உழைப்பினால்
அன்றி வேறு எதுவும் இல்லை!
எனவே தான் என்ற தன்னை மறந்து
தமது என்ற ஒற்றுமை ஓங்க உணர்வு கொள்!
மனித உணர்வே ஆன்மீக உணர்வு
அன்பை அரவணை
ஆற்றல் பெருகும்
உன் கடமை சித்தமாகும்!
கடவுளுக்கு நன்றிகள்!
செல்வராஜ் ராமன்
18/33, நெல்லு கடைத்தெரு
கும்பகோணம் – 612001
கைபேசி: 9095522841