மனிதரின் மகத்தான
மனதின் நம்பிக்கை
கண் காணா கடவுள்
வறுமை
ஏதுமில்லா ஏமாற்ற வாழ்வில்
ஏழைகளின் வீட்டில் உரிமையோடு
உறவாடும் விலகாத வறுமை
பிச்சை
முடியாதவர்கள் முடிந்தவர்களிடம் கேட்கும்
முடிவில்லா பசியின் முயற்சி
முதலில்லா பிச்சை
கொள்கை
ஒவ்வொரு மனிதரிடமும்
இருக்க வேண்டிய
ஒரு மதிப்புமிக்க கொள்கை,
மற்றவரின் தனிப்பட்ட
செயலைப் பற்றிப்
பேசாதிருப்பதே!
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்