கடவுள் என் மேல் வைத்த அன்பின் அருமையை
என் தாயின் மறைவில் உணர்ந்தேன்.
கடவுள் எனக்கு தந்த ஆயுளின் அருமையை
என் நோயின் மறைவில் உணர்ந்தேன்.
கடவுள் எனக்கு தந்த உறவுகளின் அருமையை
என் தனிமையில் உணர்ந்தேன்.
கடவுள் எனக்கு தந்த இன்பங்களின் அருமையை
என் துன்பகாலங்களில் உணர்ந்தேன்.
கடவுள் எனக்கு தந்த பெலத்தின் அருமையை
என் பெலவீனத்தில் உணர்ந்தேன்.
கடவுள் எனக்கு தந்த ஆஸ்தியின் அருமையை
என் வறுமையில் உணர்ந்தேன்.
தேவன் எனக்கு தந்த ஞானத்தின் அருமையை
இந்தக் கவிதையில் உணர்ந்தேன்.
– S. சுசிலா
மறுமொழி இடவும்