கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்

காந்தி

என்றைக்காவது ஓர் நாள் நாம் அனைவருமே மரணப் படுக்கையில் துயில் கொள்வது நிஜம்!

உயிர் நம் உடலை விட்டுப் பிரியும் முன், சிலர் மௌனமாகக் கண்களை மூடலாம். இன்னும் சிலரோ அருகிலிருப்பவர்களிடம் ஏதோ சொல்லி விட்டுக் கண்களை மூடலாம். மேலும் சிலர் படைத்த இறைவனை நினைத்து அவனது நாமத்தை உச்சரிக்கலாம்.

இப்படி மனிதனுக்கு மனிதன் கடைசி மூச்சை விடும் சமயம் வெவ்வேறு சொற்களை, வார்த்தைகளை உதிர்த்து விட்டு மரணத்தை முத்தமிடலாம்.

உலகப் புகழ் பெற்ற ஒரு சில முக்கியப் பிரமுகர்கள் தங்களது மரணப் படுக்கையில் உதிர்த்த கடைசி வார்த்தைகளைப் பாருங்களேன்!

1. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரும், ‘ஆங்கில மொழியின் அகராதி’ என்றும் அழைக்கப்பட்ட டாக்டர் சாமுவேல் ஜான்சன், “நன்கு வாழ்!” (Live Well) எனக் கூறி முடிக்க அவரது உயிர் பிரிந்ததாம்.

2. லார்ட் பைரனோ (Lord Byron) “நான் இப்போது உறங்க வேண்டும்” (I must sleep now) என்றாராம்!

3. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர் பிரியும் முன் கூறிய வார்த்தைகள் அநேகமாக அனைவருக்குமே தெரியும்.

4.தேசப்பிதாவான மகாத்மா காந்தியோ கோட்ஸேயால் சுடப்பட்டு உயிர் விடும் சமயம் “ஹேராம்!” என்றார்.

5.மாவீரன் நெப்போலியன் தன் மனைவியின் பெயரை ‘ஜோஸபைன்! ஜோஸபைன்!!‘ என அழைக்க உயிர் பிரிந்தது.

6.ஆங்கிலேய கடற்படைத்தலைவரான ‘ஹொராஷியோ நெல்சன்’ கடமை நெஞ்சம் படைத்த ஓர் அதிகாரி. ‘ட்ரஃபால்கர்’ (Trafalgar) யுத்தத்தில் வெற்றி பெற்று வீரமரணம் அடைந்த தருவாயில், “ஆண்டவனுக்கு நன்றி! நான் என் கடமையைச் செய்து முடித்து விட்டேன்” (Thank God! I have done my duty)

7.’சர்வால்டர் ராலே’ என்னும் புகழ்பெற்ற எழுத்தாளர் அரசியல்வாதிகளின் பொறாமையால் தூக்கிலிடப்பட்ட போது தலையை கிழக்கு நோக்கி வைத்துக் கொள்ளுமாறு தூக்கிலிடுபவன் கூற, “தலை எப்படி இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. மனம் சரியான பாதையில் இருந்தால் போதும்!” என்றாராம் மிக அமைதியாக! மரணத்தைத் தழுவுமுன் இவ்வளவு நெஞ்சுரத்துடன் ஆணித்தரமாகப் பேசுபவர்கள் வெகுசிலரே இருக்க முடியும்.

8.நெஞ்சுரம் படைத்த அமெரிக்க சுதந்திரப் போராட்ட வீரர் நாதன் ஹேல் என்ன சொன்னார் தெரியுமா? ‘இறைவா! என் நாட்டுக்காக உயிரைத் துறக்க எனக்கு ஒரே ஒரு வாழ்க்கையை மட்டும் கொடுத்து விட்டாயே!

9.பிரெஞ்சுப் புரட்சியின் போது வீழ்ச்சியடைந்த முக்கியப் புள்ளிகளில் ஒருவரான ‘ஜார்ஜஸ் டான்டன்’ பிரெஞ்சுப் புரட்சியாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். இவர் தூக்கிலிடப்பட்ட சமயம் “எனது தலையை மக்களுக்குக் காட்டுங்கள். அவர்கள் இது போன்ற தலையை ஒவ்வொரு நாளும் காண்பதில்லை!” என்றாராம்.

10.மரண இருள் சூழும் போது சிலர் நம்பிக்கை ஒளி கண்களில் தெரிய உயிரை விட்டார்கள். அப்படி மிகுந்த நம்பிக்கையுடன் உயிரை விட்டவர் ‘பீதோவன்’ என்கிற காதுகேளாத ஆங்கிலேயே பாடலாசிரியர் (கவிஞர்) “நான் சொர்க்கத்தில் நிச்சயமாகக் கேட்கும் சக்தியைப் பெறுவேன்” (I shall hear in Heaven) என்றாராம்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

Comments

“கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்” அதற்கு 2 மறுமொழிகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.