கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2020

கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 20 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து, 11.06.2020 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை, சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2020-ஆம் வெளியிடப்பட்ட கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கரக்பூர், 80.46 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்க்கி, 79.75 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கோழிக்கோடு, 69.24 பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

வ. எண் பெயர் மதிப்பெண் இடம்
1 தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி 60.29 8
2 தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை 50.30 17
3 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 48.73 18
4 இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம், சென்னை 48.50 20

 

கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2019  பட்டியலில், 15 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 2 கல்லூரிகள்  இடம் பெற்றன.

ஆனால் கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை2020 பட்டியலில், 20 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 4 கட்டிடக்கலை கல்லூரிகள்  இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் தமிழக கட்டிடக்கலை கல்லூரிகள் தொடர்ந்து முன்னேறவும், பெற்ற இடத்தைத் தக்க வைக்கவும் இன்னும்  முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.