108 கணபதி போற்றி.
ஓம் அநந்த சக்தி குமாரா போற்றி
ஓம் அத்தி முகத்தவா போற்றி
ஓம் அரித்திரு மருகா போற்றி
ஓம் அருகின் புல்லே புல்லுவாய் போற்றி
ஓம் அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் போற்றி
ஓம் அன்புடை அமரர்கள் காப்பாய் போற்றி
ஓம் ஆவியோ டாக்கை ஆண்டாய் போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரா போற்றி
ஓம் ஆனந்த வாழ்வே அருளா போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி (10)
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆடுதுறை உறை அழகனே போற்றி
ஓம் ஆவித் துணையே கணபதி போற்றி
ஓம் ஆரண முகத்தோய் போற்றி
ஓம் இந்திர குரு போற்றி
ஓம் ஈடிணை இல்லா இனியா போற்றி
ஓம் உள்ளம் அமரும் உத்தமா போற்றி
ஓம் உண்மை பொலிவே போற்றி
ஓம் உன்னிய கருமம் முடிப்பாய் போற்றி
ஓம் எந்தன் ஊழ்வினை நீக்குவாய் போற்றி (20)
ஓம் எம் பெருமானே இறைவா போற்றி
ஓம் எனதற்புதமே போற்றி
ஓம் ஏகதந்தா போற்றி
ஓம் ஏழுலகம் தொழ நின்றாய் போற்றி
ஓம் ஐயம் கோபம் அழிப்பாய் போற்றி
ஓம் ஐயா கணபதி நம்பியே போற்றி
ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒன்று பலவாய் உள்ளாய் போற்றி
ஓம் கருதுவார் இதயத்தில் இருப்பாய் போற்றி
ஓம் கமலாசனத்துக் கற்பகமே போற்றி (30)
ஓம் கற்பக விநாயகக் கடவுளே போற்றி
ஓம் கருணாலயனே போற்றி
ஓம் கற்றவர் துணையே போற்றி
ஓம் கணத்தேவர் துரையே போற்றி
ஓம் கவிதையின் உயிரே போற்றி
ஓம் கரும்பின் கனிவே போற்றி
ஓம் கணநாதன் போற்றி
ஓம் கணாதிபன் போற்றி
ஓம் கணபதி ராயன் போற்றி
ஓம் கரிய நிறத்தவ போற்றி (40)
ஓம் கயமை அழிப்பவ போற்றி
ஓம் கலியான விநாயகா போற்றி
ஓம் கஜானனா போற்றி
ஓம் கணேச்வரா போற்றி
ஓம் காரிய முதல்வா போற்றி
ஓம் காரண குருவே போற்றி
ஓம் காலம் மூன்றையும் கடந்தோய் போற்றி
ஓம் சங்கரன் அருளிய சற்குரு விநாயகா போற்றி
ஓம் சக்தி விநாயகா போற்றி
ஓம் சித்தி விநாயகா போற்றி (50)
ஓம் சாமர கர்ண போற்றி
ஓம் சிற்பர மோனத் தேவ போற்றி
ஓம் சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி
ஓம் சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே போற்றி
ஓம் செஞ்சுடர் தேவன் போற்றி
ஓம் சோம்பல் அழிப்பவன் போற்றி
ஓம் ஞான விநாயகன் போற்றி
ஓம் தத்துவமாகியதோர் பிரணவமே போற்றி
ஒம் தனிப் பெருந் துணையே போற்றி
ஓம் நாதனே போற்றி (60)
ஓம் நாதமே போற்றி
ஓம் நான் மறையே போற்றி
ஓம் நித்திய பொருளே போற்றி
ஓம் நிறைவினைச் சேர்க்கம் நிர்மலனே போற்றி
ஓம் பக்தர்கள் தவமே போற்றி
ஓம் பழமே கொண்டவ போற்றி
ஓம் பங்கயத் தமர்ந்தவ போற்றி
ஓம் படைப்புக்கு இறைவன் போற்றி
ஓம் பண்ணவர் நாயகன் போற்றி
ஓம் பதியே போற்றி (70)
ஓம் பரம் பொருளே போற்றி
ஓம் பக்தர்கட் கருளும் பரமே போற்றி
ஓம் பார்வதி மைந்தா போற்றி
ஓம் பார்வலம் வந்தவ போற்றி
ஓம் பாம்பணி கொண்டவ போற்றி
ஓம் பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
ஓம் பிள்ளையார் பட்டிக் கற்பகம் போற்றி
ஓம் பிறைமதி சூடியவா போற்றி
ஓம் புவனம் காப்பவா போற்றி
ஓம் புண்ணிய முதல்வா போற்றி (80)
ஓம் புதுவினை காட்டும் புண்ணியா போற்றி
ஓம் புத்தி விநாயகா போற்றி
ஓம் புதுவை விநாயகா போற்றி
ஓம் பொரியைச் சுவைப்பவா போற்றி
ஓம் போத ஞானப் பொருளே போற்றி
ஓம் மந்திரத் தேவனே போற்றி
ஓம் மகேசுவர புத்திரனே போற்றி
ஓம் மன்றுளாடும் மணியே போற்றி
ஓம் மந்தம் தவிர்க்கும் மந்தாரமே போற்றி
ஓம் மங்கள கணபதி போற்றி (90)
ஓம் மணக்குளக் கணபதி போற்றி
ஓம் மூல சக்தியின் முதல்வா போற்றி
ஓம் மூஷிக வாகனா போற்றி
ஓம் மோதக ஹஸ்தா போற்றி
ஓம் மெய்யாம் கடவுளே போற்றி
ஓம் வல்லிமைக் குன்றமே போற்றி
ஓம் வரங்கள் பொழியும் முகிலே போற்றி
ஓம் வல்லபை கோன் மருவிய மார்ப போற்றி
ஓம் வான் மறைத் தலைவ போற்றி
ஓம் வாரண முகத்தவ போற்றி (100)
ஓம் வாம ரூப போற்றி
ஓம் வாழ்வினுக்கோர் அணியே போற்றி
ஓம் வானில் எழும் சுடரே போற்றி
ஓம் வித்தைக்கிறைவா போற்றி
ஓம் வித்தக விநாயகா போற்றி
ஓம் விக்கிந விநாயகா போற்றி
ஓம் வெற்றி விநாயகா போற்றி
ஓம் வேந்தே கணபதி போற்றி. (108)
சரணம் கணேசா சாமி சரணம் கணேசா
சரணம் கணேசா சாமி சரணம் சரணமே!