கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க
நம்மை அது மதிக்குதா இல்லை
மிதிக்குதானு பாருங்க
விடிய விடிய அலைபேசி தரும் வெளிச்சம்
அது ஏத்துக்குதா என்று மெல்ல கேளுங்க
எண்ணெய் குளியல் இப்ப இல்லை
கண்ணுக்கு ஏற்ற உணவு எங்கும் இல்லை
கொஞ்சம் கூட கண்ணைப் பற்றி
நினைச்சிடவும் நேரமில்லை என்று
வாழ்க்கை ஆன காலம்
அவசரமாய் தெளிச்ச கோலம்
மஞ்சள் நிற பழங்கள் கூட
மதிய உணவில் கீரை சேர
மாலைநேர வெயிலும் நமது
உடலை தழுவி விட
கண்ணெல்லாம் மின்னலாகும்
வாழும் காலம் வரை
பார்வை நிலைக்கும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!