கண்ணன் பேசும் பேச்செல்லாம்
நல்வழி ஓதும் நான்மறையாம்
எண்ணிப் பார்த்தால் வியப்பதுவாம்
அல்லல் தீர்க்கும் அருளுரையாம்…
அமுதிலும் இனியன் பெருமானாம்
அழுத்திடும் துயரைத் தீர்ப்பானாம்
ஆநிரை மேய்த்துக் காப்பானாம்
ஆயிடை நாயகன் கோமகனாம்…
ஆடிப் பாடி அகம் கரைந்தால்
நாடி நம்மிடை வந்திடுவான்
ஓடியோடி மறைந்தாலும் உன்னை
நம்பினேன் என்றால் நலம் தருவான்…
கோபியர் கூட்டம் பலராட்டம்
கோகுலம் எங்கும் ஒளி வீசும்
கோவர்தன மலையே புகழ் பேசும்
கோவிந்தனே என்றும் துணையாகும்…
கண்ணன் பிறந்தது சிறைவாசம்
அவன் சொன்னதை கேட்டால் மணம் வீசும்
கண்ணன் வரவைக் களித்திடுவோம்
திண்ணம் அவனருள் பெற்றிடுவோம்.
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!